George / 2015 மே 25 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகர் அஜீத்தும் இயக்குநர் விஷ்ணுவர்தனும் மீண்டும் இணையவுள்ளதாக கோடாம்பாக்க வட்டாரத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
அஜீத் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அஜீத்துக்கு 56-வது திரைப்படமாகும்.
இந்த திரைப்படத்துக்கு பிறகு தனது 57ஆவது திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை விஷ்ணுவர்தனுக்கு அஜீத் அளித்திருப்பதாக கோடாம்பாக்க வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அஜீத்தும்-விஷ்ணுவர்தனும் ஏற்கெனவே இணைந்து 'பில்லா', 'ஆரம்பம்' என பெரிய வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளனர்.
விஷ்ணுவர்தன் ஆர்யா-கிருஷ்ணாவை வைத்து 'யட்சன்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த திரைப்படம் முடிந்ததும் புதிய திரைப்படத்தில் இருவரும் இணைவார்கள் என எதிர்பார்க்கலாம்.
18 minute ago
06 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
06 Apr 2026