2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

பிரியாணி கொடுத்த ப்ரியா ஆனந்த்

George   / 2015 ஜூன் 01 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய், அஜீத் வழியில் நடிகை ப்ரியா ஆனந்த் தனது திரைப்படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார்.

நடிகர் அஜீத்  படப்பிடிப்பு இறுதிநாளில் பந்தல் போட்டு துணை நடிகர், நடிகைகள், உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவு உதவியாளர்கள், நடன குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் தன் கைப்பட பரிமாறி பிரியாணி விருந்து அளிப்பது வழமை.

அதனைபோல நடிகர் விஜய்யும் பண்டிகை நாட்களில் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுப்பார். தற்போது நடிகை ப்ரியா ஆனந்த்தும் இந்த வரிசையில் சேர்ந்து தனது திரைப்படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியுள்ளார்.

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் இந்த விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிப்பதுடன் கயல் ஆனந்தி நாயகியாக நடிக்கிறார்.

ப்ரியா ஆனந்தும் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் முடிந்ததும் தனது செலவிலேயே திரைப்படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து பரிமாறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .