2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

எனக்கு குழந்தை பிறக்கவில்லை: அதிர்ச்சியில் தப்சி

Administrator   / 2015 ஜூன் 08 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக வெளியான செய்தியை நடிகை தப்சி மறுத்துள்ளார்.

தப்சியும் பெட்மின்டன் வீரர் மத்தியாஸ் போயியும் காதலிப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியதுடன் இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களும் வெளிவந்துள்ளன.

இந்நிலையில், தப்சிக்கு குழந்தை பிறந்துள்ளாக திடீரென்று செய்தி வெளிவந்ததுடன் பேஸ்புக், டுவிட்டரில் இச்செய்தி வேகமாக பரவியது.  குழந்தை பிறந்ததால் மத்தியாஸ் போயி தனது போட்டி ஒன்றை ரத்து செய்து விட்டதாகவும் கூறப்பட்டது. 

இச்செய்தியை பார்த்து திரையுலகினர் அதிர்ச்சியானார்கள். ஆனால் மத்தியாஸ் போயின் நண்பரான மாஸ்டன் மோமோசென் என்பவருக்குதான் குழந்தை பிறந்ததாம். அதைதான் தப்சிக்கு குழந்தை பிறந்ததாக தவறாக நினைத்து இந்த வதந்தியை பரப்பி உள்ளனர். 

இந்த வதந்திக்கு பதில் அளித்த தப்சி எனக்கு இப்போது நடிப்புதான் முக்கியம். அதில்தான் கவனமாக இருக்கிறேன் திருமணம், குழந்தை பற்றியெல்லாம் சிந்தித்து பார்க்கவே இல்லை. அதற்கு நேரமும் கிடையாது என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X