2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆண்ட்ரியாவை காயப்படுத்தும் கிசுகிசு

George   / 2015 ஜூன் 29 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிசுகிசுக்கள் தன்னை காயப்படுத்துவதாக நடிகை ஆண்ட்ரியா வேதனை வெளியிட்டுள்ளார்.

என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. அவர்களை எதிர்கொள்ள எனக்கு நேரம் இல்லை. பொறுமையும் இல்லை. கிசுகிசுக்கள் மூலம் என்னை காயப்படுத்தினர். தற்போது தெளிவாகி விட்டேன். அவற்றை கண்டு கொள்வது இல்லை என்கிறார் நம்ம ஆண்ட்ரியா.

ஆண்ட்ரியா நடித்துள்ள இது நம்ம ஆளு, விஸ்வரூபம் 2 ஆகிய திரைப்படங்கள் வெளியிடுவதற்கு தயாராக உள்ள நிலையில் தரமணி என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

மலையாளத்தில் அன்னயும் ரசூலும் என்ற திரைப்படத்தில் பகத் பாசில் ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்க, அந்த திரைப்படம் வெளியானதும் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக பகத் பாசில் வெளிப்படையாக அறிவிக்க இது திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஆனால், ஆண்ட்ரியாவோ யாரையும் காதலிக்கவில்லை என்று மறுக்க, மறுபடியும்  இசையமைப்பாளர் அனிருத்துடனும் இணைத்து கிசுகிசுவில் மாட்டிக்கொண்டார்.

இருவரும் முத்தமிடுவது போன்ற புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. இது ஆண்ட்ரியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் அமைதியாகவே அம்மணி இருந்தார். 

ஆண்ட்ரியா பற்றி குறைவில்லாமல் வெளிவரும் கிசுகிசுக்கள் பற்றி மனந்திறக்கும்போது, 'என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. அவர்களை எதிர்கொள்ள எனக்கு நேரம் இல்லை. பொறுமையும் இல்லை. கிசுகிசுக்கள் மூலம் என்னை காயப்படுத்தினர். தற்போது தெளிவாகி விட்டேன். அவற்றை கண்டு கொள்வது இல்லை'. என்றார். 

வாழ்க்கையில் முக்கிய விடயங்களில் மட்டுமே என் கவனத்தை செலுத்துகிறேன். மென்மையான கதையம்சம் உள்ள திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று சொல்கிறார் நம்ம அழகு ஆண்ட்ரியா.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X