2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ரஜினிக்கு வில்லனாகும் சீயான்

Menaka Mookandi   / 2015 ஜூலை 05 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம் உள்ளிட்டோர் நடித்த எந்திரன் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து, எந்திரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தார் ஷங்கர்.

இந்நிலையில் அவர் 'ஐ' திரைப்பட வேலைகளில் ஆண்டுக் கணக்கில் பிஸியானதால் 'எந்திரன் 2' வேலைகளை ஆரம்பிக்க முடியவில்லை. 'ஐ' ரிலீசானதை அடுத்து 'எந்திரன் 2' திரைப்படத்தை ஆரம்பிக்கவுள்ளார் ஷங்கர்.

உடல் நலம் காரணமாக 'எந்திரன் 2' திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க மாட்டார். அவருக்கு பதிலாக பொலிவூட் நடிகர் அமீர்கான் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின. அமீர்கானை வைத்து எந்திரன் 2 திரைப்படத்தை எடுத்து அதை தமிழ் மற்றும் இந்தியில் வெளியிட ஷங்கர் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்பட்டது.

அமீர்கான் பொலிவூட் இரசிகர்கள் கொண்டாடும் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எந்திரன் 2 திரைப்படத்தில் அமீர்கான் அல்ல ரஜினி தான் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
 
திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக சீயான் விக்ரமை தேர்வு செய்துள்ளார்களாம். ரஜினி, ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகே எந்திரன் 2 திரைப்படத்தில் நடிப்பாராம். ரஜினிக்கு ஏற்ற ஹீரோயினை ஷங்கர் தேடிக்கொண்டிருக்கிறாராம்.


  Comments - 0

  • smart sathish Wednesday, 08 July 2015 09:44 AM

    விக்ரம் சார் ஒரு நடிப்புக் கடவுள். இப்படி பட்ட மாமனிதர் ரஜினி அவர்களுக்கு வில்லனாக நடிப்பது மிக மிக நல்ல விசயமே. படம் வெற்றி பெற நல் வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .