2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

பேயாக மாறிய 'லட்டு' நடிகை

George   / 2015 ஜூலை 13 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் நடித்த விசாகா சிங், தற்போது பேய் திரைப்படமொன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளாராம்.

இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு அவருக்கு வாய்க்கு கிடைத்ததற்கு காரணமே அவரது கண்கள்தானாம். அந்த கண்களைச்சுற்றி அந்த திரைப்படத்தில் ஒரு கதையே உள்ளதாம். 

அதுமட்டுமின்றி, மாயா திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருப்பது போன்று இந்த திரைப்படத்தின் கதையும் விசாகாவை சுற்றித்தான் பின்னப்பட்டிருக்கிறதாம். அதனால் அடுத்தபடியாக பேய் திரைப்பட சுற்றை அதிரடியான ஆரம்பிக்க உற்சாகமாகிக்கொண்டிருக்கிறார் விசாகாசிங்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தை தொடர்ந்து அத்திரைப்படத்தில் நடித்த நாயகன் சேதுவுக்கு ஜோடியாக வாலிபராஜா என்ற திரைப்படத்தில் நடித்தார்.

ஆனால், அந்த திரைப்படம் இன்னமும் திரைக்கு வரவில்லை. அதனால் அடுத்தபடியாக ஹீரோயினாக மட்டுமின்றி வித்தியாசமான கேரக்டர்களிலும் நடிப்பேன் என்று கூறிக்கொண்டு படவேட்டையில் ஈடுபட்டவருக்கு ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் தான் அவர் இந்த பேய்திரைப்படத்தில்  ஒப்பந்தமாகியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .