2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஏற்றி இறக்கிய இஞ்சி இடுப்பழகி

George   / 2015 ஜூலை 19 , பி.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஞ்சி இடுப்பழகி திரைப்படத்துக்காக 20 கிலோகிராம் எடையை ஏற்றி இறக்கியுள்ளார் அனுஷ்கா. பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து அனுஷ்கா ஒப்பந்தமாகியுள்ள திரைபடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைந்ததையடுத்து திரைப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. 

இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தின் கதையே எடைக் குறைப்பு பற்றியதுதான். இந்தப் திரைப்படத்தில் அனுஷ்கா இரண்டு தோற்றத்தில் வருகிறார். இந்தப் திரைப்படத்துக்காக அனுஷ்கா 20 கிலோகிராம் எடை கூடி, பின்னர் ஆர்யா கொடுத்த சில டிப்ஸ் மூலம் எடையை மீண்டும் குறைத்து வருகிறாராம். 

குண்டான அனுஷ்காவைப் பார்த்த பலரும், அனுஷ்காவுக்கு அக்காவா நீங்க என்று கேட்டார்களாம். ஆர்யா இந்தப் திரைப்படத்தில் ஒரு உடற்பயிற்சி நிபுணராக தோன்றுகிறார். சமீபத்தில் ஸ்வீடன் நாட்டில் ஆர்யா பங்கேற்று வெற்றிப் பெற்ற சர்வதேச சைக்கிள் போட்டி பற்றிய காட்சிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளனவாம்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X