2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

எந்திரன் வசூலை முறியடித்து பாகுபலி சாதனை

George   / 2015 ஜூலை 21 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பிரம்மாண்ட திரைப்படமான 'பாகுபலி', தென்னிந்திய சினிமாவிலேயே 300 கோடி இந்திய ரூபாய்க்கும் அதிகமாக  வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம  செய்யப்பட்டு வெளியிடப்பட்டதுடன் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.

இதுவரை, எந்திரன் திரைப்படம் 290 கோடி இந்திய ரூபாய் வசூலித்ததுதான் தென்னிந்திய சினிமா வசூலித்த பெரிய சாதனையாக இருந்தது. 

சூப்பர் ஸ்டார்கள் யாரும் இல்லாமல் சாதாரண நடிகர்களை கொண்டு உருவான இப்படம், ஏற்கெனவே, ரஜினி நடிப்பில் வெளிவந்த 'எந்திரன்' திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

இத்திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை அடுத்த வருடம் வெளியிடப்படவுள்ளதுடன் இரண்டாம் பாகத்தின் 40 சதவீத பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X