2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

நகைச்சுவையை விரும்பும் நயன்

George   / 2015 ஜூலை 21 , பி.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்னர் நயன்தாராக மிகவும் சீரியசான நடிகையாகி விட்டார். கமெரா முன்பு நடிக்கும் நேரம்போக மற்ற நேரங்களில் சீரியசாகவே அவர் அமர்ந்திருப்பார். 

அவருக்கு முன்னால் அமர்ந்து அரட்டையரங்கம் நடத்துபவர்கள் விழுந்து விழுந்து சிரித்தால்கூட அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் லேசான முன்முறுவலோடு நிறுத்திக்கொள்வார் நயன்தாரா.

விளைவு, அவரது முகபாவனைகளை கவனித்த இயக்குனர்கள் அதன்பிறகு சீரியசான கதைகளுடன் நயன்தாராவை முற்றுகையிட்டனர். அப்போதைக்கு அது அவருக்கு ரொம்ப பொருத்தமாக  இருந்தது. 

இந்நிலையில், மாஸ், மாயா திரைப்படங்களை அடுத்து தனி ஒருவன், நானும் ரௌடிதான், காஷ்மோரா, திருநாள் ஆகிய திரைப்படங்களில் நடிக்கும் நயனுக்கு, ஜனரஞ்சகமான கதைகளில் நடிப்பதிலும் ஆர்வமாக இருக்கிறாராம்.

நானும் ரௌடிதான், திருநாள் ஆகிய திரைப்படங்களில் சீரியசாக கதைகள் என்றாலும், சில காமெடி காட்சிகளிலும் நயன்தாரா நடித்திருக்கிறாராம். அதனால் அடுத்தபடியாக இன்னும் காமெடியான கதைகளில் நடிப்பதிலும் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம். 

அதனால், தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம் காமெடியை அதிகமாக வைக்குமாறு தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுகிறதாக தகவல்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .