2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

எமியின் அழகு ரகசியம் ABC

George   / 2015 ஜூலை 27 , பி.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது அழகுக்கு மற்றும் ஆரோக்கியத்தின் ரகசியம் ஏபிசி என நடிகை எமி ஜெக்சன் தெரிவித்துள்ளார்.  நடிகைகளைப் பற்றிய பேசும் போது அவர்களின் தோற்றம் பற்றியும் உடல் பராமரிப்பு பற்றியும் அறியும் ஆர்வம் பலருக்கும் இருக்கும். 

என்ன உணவு சாப்பிடுகிறார்கள் என்று அறிய ரசிகர்களின் மனம் குறிப்பாகப் பெண்கள் மனம் விரும்புவர் இது பற்றிக் கேட்கும் போது. சிலர் உண்மைகளைப் பேசுவதுண்டு. சிலர் ஏதாவது கூறிச் சமாளிப்பதுண்டு. அதை ஒரு இராணுவ ரகசியம் போல எண்ணி பல நடிகைகள் வெளிப்படையாகப் பேசுவதில்லை.

எனினும் நடிகை எமியிடம் அவரது அழகின் ரகசியம் பற்றி கேட்டபோது, 'முக்கியமாக என் ஆரோக்கியத்தின் ரகசியம் ஏபிசி. அதாவது அப்பிள், பீட்ரூட்,  கெரட் இவை மூன்றும்தான் என் அன்றாட உணவுகளில் அவசியம் இருக்கும். அப்பிள், பீட்ரூட் கெரட் இவற்றின் சாறுகளை தவறாது தினமும் பருகுவேன் இவை செய்யும் ஆரோக்கியம் வேறு உணவு வகையில் கிடைக்காது. என்கிறார்.

அத்துடன், தனது உணவு வகைகளைப் பட்டியலிடும் போது காலை விடியல், எலுமிச்சை சாறு கலந்த வெந்நீருடனே தொடங்கும், பின்னர் ஓட்ஸ், தேன்,  முட்டை, சிக்கன் சாலட், இனிப்பு உருளை, மாதுளை, நண்டு, மீன், சிக்கன், பச்சையம் நிறைந்த காய்கறிகள் போன்றவை இருக்கும் என்கிறார் எமி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X