2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

கபாலி பற்றி சொல்ல மாட்டேனே!

George   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிங்கா திரைப்படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த்,அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க போகிறார். இந்த திரைப்படத்தின் ஹீரோயினாக ராதிகா ஆப்தே நடிக்கிறார், இவர்களுடன் பிரகாஷ்ராஜ், கலையரசன் போன்றோர்களும் நடிக்கின்றனர். ரஜினி தாதா ரோலில் நடிக்கிறார்,

அதனால் திரைப்படத்துக்கு கபாலிஎன்று பெயர் வைத்துள்ளனர். அடுத்தமாதம் மலேசியாவில் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.

இந்நிலையில் கபாலி திரைப்படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியிருக்கும் ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில், 'கபாலி திரைப்படத்தின் கதை மிகவும் வித்தியாசமானது, அற்புதமானது, ஆனால் அது எப்படிப்பட்ட கதை என்று என்னால் இப்போது கூற முடியாது, அது ரகசியம். திரைப்படத்தில் எனது ரோலும் முக்கியமானது, குறிப்பாக எனது நடிப்பு திறனை முழுமையாக வெளிகொண்டு வர இருக்கிற திரைப்படம், எல்லாவற்றுக்கும் மேலாக இது ரஜினி திரைப்படம்' என்று கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .