2025 மே 16, வெள்ளிக்கிழமை

அழகான பேய்கள்

George   / 2016 ஜனவரி 01 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


2015ஆம் ஆண்டை வழியனுப்பி வைத்துவிட்டு புதிய ஆண்டை வரவேற்றுக்கொண்டிருக்கும் நிலையில் வருட ஆரம்பத்திலேயே தமிழ் சினிமாவை அழகான பேய்கள் ஆக்கிரமிக்க போகின்றன.

அதாங்க தமிழ் சினிமாவின் அண்மைய டிரென்டான பேய் திரைப்படங்கள் வரிசையில் இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் சுந்தர் சியின் அரண்மனை 2 வெளியாகவுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் இரண்டு அழகான பேய்கள்... சாரி... அழகான நடிகைகள் பேய்களாக நடித்துள்ளன.

சுந்தர்.சியின் திரைப்படங்கள் என்றாலே, ஒரே திருவிழா கூட்டமாகத் தான் இருக்கும். அரண்மனை  2 திரைப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது. சித்தார்த் ஹீரோவாக இருந்தாலும், த்ரிஷா, ஹன்சிகா ஆகியோருக்கு தான், கதையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

ஆனால், சித்தார்த் இதை பற்றியெல்லாம், அதிகம் அலட்டிக் கொள்வது இல்லை. அண்மையில் இடம்பெற்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், இந்தத் திரைப்படத்தில், த்ரிஷா, ஹன்சிகா என்ற அழகான இரண்டு பேய்கள் நடித்துள்ளன என, நகைச்சுவையான கலாய்த்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .