2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

AAA-இல் 9 பாடல்கள்

George   / 2016 ஜூன் 25 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

த்ரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்து சிம்பு நாயகனாக நடிக்கும் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் திரைப்படத்தை இயக்க உள்ளார். 

சில வருட இடைவெளிக்குப் பிறகு சிம்புவும், யுவனும் மீண்டும் இந்த திரைப்படம் மூலம் இணைந்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம் பெறுவதாக இயக்குநர் ஆதிக் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் டிரென்ட்செட் செய்யப் போகும் புதிய அல்பமாக இந்த திரைப்படம் இருக்கும், குறிப்பாக பின்னணி இசை, என ஆதிக் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணியில் இணையும் போது அனைவரும் சொல்லும் வழக்கமான வார்த்தைகள்தான் இவை. 
த்ரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தில் கதையை நம்பாமல் சதையை மட்டுமே நம்பி திரைப்படம் எடுத்த இயக்குநர் ஆதிக், இந்தப் புதிய திரைப்படத்தில் கூட கதையை விட மற்ற விடயங்களை அதிகம் வைக்க உள்ளார் என்று கோலிவுட்டில் சொல்கிறார்கள். 

திரைப்படத்தின் தலைப்பிலேயே இத்தனை ஏக்களை வைத்து திரைப்படத்தில் வைக்கவில்லை என்றால் எப்படி?, என யோசித்திருப்பார்களோ.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X