2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

DD-க்கு என்ன ஆச்சு? அதிர்ந்த ரசிகர்கள்!

J.A. George   / 2022 ஜனவரி 05 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

திவ்ய தர்ஷினி என்கிற டிடி, ஆர்.ஜேவாக இருந்து, பின்னர் விஜேவாகவும் மாடலாகவும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

காஃபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் டிடி இன்னும் அதிக ரசிகர்களை கவர்ந்தார். அண்மையில் விஜய் டிவியில் ஆர்.ஆர்.ஆர் படம் தொடர்பான பேட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்தநிலையில் டிடி, வீல் சேரில் அழைத்துவரப்படும் ஒரு வீடியோ பரவி, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வந்தது. இதை பார்த்த பலரும் எதனால், டிடி வீல் சேரில் வருகிறார்.?  டிடிக்கு என்ன ஆச்சு? என தொடர்ச்சியாக கேட்டுவந்தனர். 

இதற்கு காரணம், டிடிக்கு திடீரென முடக்குவாத பிரச்சனை ஏற்பட்டுவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த பிரச்சனையால், தன்னால் நடக்கமுடியவில்லை என்றும், ஆனால் இதெல்லாம் தனக்குள் இருக்கும் குழந்தையை தடுக்க முடியாது என்றும் டிடி கூறியிருக்கிறார். 

இதை பார்த்த பலரும் அதிர்ச்சியானதுடன், டிடிக்கு ஆறுதல் மொழியை கூறி வருவதுடன், மிக விரைவில் சரியாகிவிடும் என நம்பிக்கை வார்த்தைகளையும் கூறி வருகின்றனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .