2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

அஜீத் இடத்தை பிடித்த பொபி சிம்ஹா

George   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைப்பை பார்த்ததும் அப்படியா... என்று ஆச்சரியமடைந்து விடாதீர்கள். கடந்த 2001ஆம் ஆண்டு அஜீத் நடிப்பில் வெளிவந்த சிட்டிசன் திரைப்படத்தில் மிகவும் பிரபலமான பிளாஷ்பெக் காட்சி, திருவள்ளூர் அருகேயுள்ள புலிகட் என்ற பகுதியில் எடுக்கப்பட்டிருக்கும். இப்போது, அந்த இடத்தில் தான் பொபிசிம்ஹா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இடம்பெற்று வருகின்றது.

அத்திப்பட்டி என்ற கிராமமாக அந்தத் திரைப்படத்தில் தோன்றிய இந்த பகுதியில், அதன் பின்னர் யாரும் படப்பிடிப்பு நடத்தாத நிலையில் 15 வருடங்கள் கழித்து அதே இடத்தில் மீண்டும் தற்போது பொபிசிம்ஹா நடிக்கும் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

விஜய்தேசிங்கு இயக்கத்தில் பொபிசிம்ஹா நடித்து வரும் வல்லவனுக்கு வல்லவன்  என்றத் திரைப்படத்தின் படப்பிடிப்புதான்  சிட்டிசன் படப்பிடிப்பு நடந்த அதே புலிகட் தீவில் நடைபெற்று வருகிறது. 

15 வருடங்களுக்கு பின்னர் இப்போதுதான் அஜீத் படப்பிடிப்பு நடந்த பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுகின்றமை  குறிப்பிடத்தக்கது. 

பொபிசிம்ஹாவுடன் ஷிவேதா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தத் திரைப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X