George / 2016 மே 12 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேதாளம் திரைப்படத்தையடுத்து, நடிகர் அஜீத் நடிக்கவுள்ள திரைப்படத்தில் இதுவரை 3 நடிகைகள் ஒப்பந்தமாகியுள்ளனர்.
வீரம் வேதாளம் திரைப்படங்களை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கவுள்ள புதிய திரைப்படத்துக்கான ஒப்பந்தத்தில் அஜீத், கடந்த வாரம் கையெழுத்திட்டார்.
அதனையடுத்து, நடிகைகள் தெரிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ஏற்கெனவே அனுஷ்கா, தமன்னா ஆகியோர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் அடிபட்டு வரும் நிலையில் அந்தப் பட்டியலில் எமி ஜெக்சனும் இணைந்துக்கொண்டுள்ளார்.
இதுஒருபுறம் இருக்க இறுதிச்சுற்று புகழ் ரித்திகா சிங்கும் நடிக்கப் போவதாகவும் ஒரு தகவல் அடிபடுகிறது.சத்யஜோதி பிலிம்ஸ் டி.தியாகராஜன் தயாரிக்கும் இத்திரைப்படத்தை இயக்க சிவாவுக்கு ஆறு கோடி இந்திய ரூபாய் சம்பளம் என்ற தகவல் அடிபடுவதுடன் வேதாளம் திரைப்படத்துக்கு இசையமைத்த அனிருத் ரவிச்சந்திரனேஇசையமைக்கிறார்.
அஜித்தே அனிருத்தை சிபாரிசு செய்ததினால் அவர் கேட்ட சம்பளத்தைக் கொடுப்பதைத் தவிர தயாரிப்பாளர்களுக்கு வேறு வழியில்லை. அந்தவகையில் அனிருத்துக்கு ஒன்றரை கோடி இந்திய ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago