Freelancer / 2024 ஜூலை 23 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷ_ட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சினை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் மீண்டும் அஸர்பைஜானில் நடந்தது.
அங்கு சில ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அஸர்பைஜானில் எடுக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் செட் அமைத்து மீதமுள்ளக் காட்சிகளை படமாக்க உள்ளார்களாம்.
இந்நிலையில் இந்த படம் பற்றி வெளியான தகவலின் படி 1997ஆம் ஆண்டு ஹொலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் என்ற எக்ஷன் படத்தைதான் அதிகாரப்பூர்வமாக ரீமேக் உரிமை பெற்று இந்த படம் உருவாக்கப்படுகிறதாம்.
பிரேக்டவுன் படத்தின் காட்சிகளோடு விடாமுயற்சி போஸ்டரும் ஒத்துப் போவதால் இந்த தகவல் உண்மைதான் எனத் தெரிகிறது.S
4 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
03 Nov 2025