2025 மே 08, வியாழக்கிழமை

அஜீத்துக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய்யும், அஜீத்தும் போட்டி நடிகர்களாக கருதப்பட்டபோதும் அவர்களுக்கிடையே நல்ல நட்பு இருந்து கொண்டிருக்கிறது. 

ஒருவர் படத்தை ஒருவர் பாராட்டும் அளவுக்கு மனப்பக்குவம் பெற்ற நடிகர் களாகவும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், நேற்று ஒரு சினிமா விழாவில் அஜீத் நடித்த விஸ்வாசம் படத்திற்கு சிறந்த பொழுது போக்கு படத்திற்கான விருது வழங்கப்பட்டது. 

இந்த விருதினை விஜய்யின் தந்தையான டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தனது கைகளால் விஸ்வாசம் படக்குழுவுக்கு வழங்கினார்.

அதையடுத்து அவர் பேசுகையில், அஜீத் படங்கள் வெற்றி பெறும்போது அவருக்கு விஜய் வாழ்த்து சொல்வார். 

அதேபோல் இந்த விஸ்வாசம் படம் வெற்றி பெற்றபோதும் அஜீத், இயக்குநர் சிவா ஆகிய இருவருக்கும் விஜய் அலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்ததாக ஒரு தகவலையும் வெளியிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X