2025 மே 14, புதன்கிழமை

அட்டபாடி கிராமத்துக்கு விஜய்யால் விமோசனம்

George   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளாவில் பாலகாட்டில் உள்ள அட்டப்பாடி என்ற பின்தங்கிய கிராமத்தில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத நிலையிலும் அந்த கிராமத்து இளைஞர்கள் விஜய்யின் ரசிகர்களாக உள்ளனர்.

அண்மையில் அங்கு சென்ற துணை கலெக்கடர், விஜய் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு அந்த கிராமத்துக் விஜய் வருகை தந்தால், அக்கிராம மக்களிடம் கல்வி, அடிப்படை வசதிகள் குறித்த விழிப்புணர்ச்சி ஏற்படும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில, பாலக்காடு துணை கலெக்டரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து சனிக்கிழமை பேசியுள்ளார்.  சுமார் 30 நிமிடங்களுக்கு அதிக நேரம் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

விஜய் அட்டப்பாடி கிராமத்துக்கு செல்லும் திகதி குறித்த அறிவிப்பு  விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெறும் பொழுதுபோக்கு திரைப்படங்களை தருவது மட்டுமின்றி நடிகர்களால் சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்த சந்திப்பு நல்ல உதாரணமாக கருதப்படுகிறது. நடிகர் விஜய்யால் ஒரு கிராமமே விமோசனம் ஆகப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .