Editorial / 2025 டிசெம்பர் 21 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபல நடிகை ராஷி கன்னா, சமீபத்திய ஒரு நேர்காணலில், தனது முதல் மலையாள பட அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில்,
"எனது முதல் மலையாளப் படத்தின் போது, மலையாளம் எளிதான மொழி அல்ல என்பதால் நான் மிகவும் பயந்தேன். மோகன்லால் சார் படத்தில் இருந்தார், அவர் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதெல்லாம், என்னுடைய பெஸ்ட்டை(சிறந்த நடிப்பை) கொடுக்க வேண்டும் என்று தோன்றும்" என்றார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கன்னா. இவரது நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் தெலுசு கடா. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
தற்போது பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங்கில் நடித்து வருகிறார். நட்சத்திர இயக்குனர் ஹரிஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. இது ஏப்ரலில் திரைக்கு வர வாய்ப்புள்ளது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago