Editorial / 2025 டிசெம்பர் 16 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2012-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான "பாப்பின்ஸ்" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பார்வதி நாயர். அதனைத்தொடர்ந்து, தமிழில் "உத்தம வில்லன், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, என்னை அறிந்தால், தி கோட்" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட் சினிமாவிலும் அறிமுகமாகியும் உள்ளார்.
இதற்கிடையில், பார்வதி நாயர் நடிப்பில் உருவாகியுள்ள படம் "உன் பார்வையில்". இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்துள்ளனர்.
வருகிற 19-ந் திகதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் இந்த படம் கணவர் மற்றும் இரட்டை சகோதரியின் மர்மமான திடீர் மரணங்களை தொடர்ந்து உண்மையை தேடும் பார்வதியின் பயணம் ரகசியங்களுடன் மர்ம உலகிற்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறது. படத்தில் பார்வையற்ற பெண்ணாக அழுத்தமிகு உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில் பார்வதி நாயர் நடித்துள்ளார்.
6 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago