2025 மே 21, புதன்கிழமை

அழகிய சூடான பூவே... 'பைரவா' முதல் பாடல்

George   / 2016 டிசெம்பர் 19 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய் நடிப்பில், பொங்கலுக்கு வெளியாகவுள்ள “பைரவா” திரைப்படத்தின் பாடல்கள் 23ஆம் திகதி வெளியாகவுள்ளதுடன், பாடல்களின் பட்டியல் இன்றைய தினம் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் உரிமையை பெற்றுள்ள லஹரி நிறுவனம், இன்று முதல் தினமும் ஒரு பாடலின் ஆரம்ப வரிகளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி, இன்று முதல்பாடலின் ஆரம்ப வரி 'அழகிய சூடான பூவே' என்று வெளியிட்டுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் கவியரசர் வைரமுத்து எழுதிய இந்த பாடலை விஜய்நரேன் மற்றும் தர்ஷனா பாடியுள்ளனர்.

இதேபோல் இன்னும் மூன்று நாட்களில் மூன்று பாடல்களின் வரிகளை இந்நிறுவனம் வெளியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X