Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆயிரம் திரைப்படங்கள் கண்ட அபூர்வ நடிகையான ஆச்சி மனோரமாவை போற்றும் வகையில் ஆச்சிக்கு மரியாதை என்ற தலைப்பில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாதக பறவைகள் இசைக்குழுவும், ஸ்டார் ஈவண்ட் நிறுவனமும் இணைந்து சென்னை காமராஜர் அரங்கில் ஜனவரி முதலாம் திகதி இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.
ஆச்சி மனோரமா திரையுலகில் நுழைந்து 50 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் மனோரமா 50 என்ற நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தினோம். தப்போது ஆச்சிக்கு மரியாதை என்ற நிகழ்ச்சியை நடத்துகிறோம்.
வா வாத்யாரா ஊட்டாண்ட, தில்லாலங்கடி ஆட்டம் போடு, முத்துக்குளிக்க வாரீகளா போன்று ஏராளமான பாடல்களை ஆச்சி பாடியியிருக்கிறார். இதனை அவரைப்போல பாடும் பாடகிகள் பாடுகிறார்கள்.
இதுதவிர ஆச்சியின் புகழ்பெற்ற கொமடி காட்சிகளை மேடையில் இன்றைய இளம் கலைஞர்கள் நடித்து காட்ட இருக்கிறார்கள். திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மனோரமா பற்றிய தங்கள் நினைவுகளை பேச இருக்கிறார்கள் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago