2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஆச்சரியப்படவைத்த விஜய் பாட்டு

George   / 2016 நவம்பர் 03 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது இரண்டாவது திரைப்படமான “தேவா”வில் “அய்யய்யோ அலமேலு ஆவின் பசும்பாலு...” என்ற பாடலை பாடியவர் விஜய். அதிலிருந்து தனது ஒவ்வொரு திரைப்படங்களிலுமே பின்னணி பாடி வந்த அவர், ஒருகட்டத்தில் பாடுவதை நிறுத்தினார்.   

பின்னர், “தலைவா”, “துப்பாக்கி”, “ஜில்லா”, “கத்தி” என தொடர்ந்து டூயட் பாடல்களாக பாடி வருகிறார். பாடிய எல்லா பாடல்களும் ஹிட்டாகி வருகின்றன. அதனால், தற்போது அவர் நடித்துள்ள “பைரவா” திரைப்படத்திலும் அவரை ஒரு டூயட் பாட வைத்துள்ளார் சந்தோஷ்நாராயணன்.  

மேலும், வழக்கம்போல இந்த பாடலுக்குரிய டியூனை முன்பே கேட்டு வாங்கிய விஜய், சில நாட்கள் அதை உள்வாங்கியபடி ஒலிப்பதிவு நிலையத்துக்கு வந்தவர், பல்லவி, சரணம் எனத் தனி டேக்கில் பாடிக்கொடுத்து விட்டாராம்.   

அதைப்பார்த்து ஆச்சரிமைடைந்த சந்தோஷ் நாராயணன், “எப்படி சார் பின்னணி பாடகர்கள் மாதிரி பாடிட்டீங்க?” என்று கேட்டதற்கு, “நானும் பின்னணி பாடகர்தான். இப்ப பாட ஆரம்பிக்கல, என்னோட இரண்டாவது திரைப்படத்தில் இருந்தே பாடிக்கிட்டிருக்கேன்” என்றாராம் விஜய்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X