2025 மே 16, வெள்ளிக்கிழமை

இதுதான் ரயில் கதை

George   / 2016 ஜனவரி 08 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மைனா திரைப்படத்தில் மலையையும், கும்கி திரைப்படத்தில் யானையையும், கயல் திரைப்படத்தில் கடலையும் பின்னணியாக வைத்து இயக்கிய பிரபு சொலமன் ரயிலை பின்னணியாக வைத்து ஒரு காதல் கதை சொல்கிறார். முழு கதையும் ஒரு ரயிலிலேயே நடக்கின்றது.

ஒரே நாளில் நடக்கிற கதை. இன்னும் பெயர் வைக்கவில்லை. அநேகமாக ரயில் என்றே வைக்கப்படலாம் என்று தெரிகிறது. டெல்லியில் இருந்து சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள உணவகத்தில் பயணிகளுக்கு உணவு, படுக்கை விநியோகிக்கும் பையனாக வேலை பார்க்கிறார் தனுஷ். பெயர் பூச்சியப்பன்.

அதே ரயிலில் பயணிக்கிறார் மலையாளப் பெண்ணான கீர்த்தி சுரேஷ். அவர் ஒரு நடிகையின் டச்அப் கேர்ள். டெல்லியில் படப்பிடிப்பை முடித்து விட்டு கிளம்பும் திரைப்படக்குழுவுடன் வருகிறார். 

பயணத்தின் போது தனுசும், கீர்த்தியும் சந்தித்துக்கொள்ள... பேசிக்கொள்ள... ஒருவர் கதையை ஒருவர் பரிமாற... ரயிலிலேயே காதல் வளர்கிறது. காதல் கனிந்து வரும் நேரத்தில் ஒரு பிரச்னையை அவர்களை இடியாய் தாக்குகிறது. அது என்ன? அதிலிருந்து இருவரும் மீண்டு காதலில் ஜெயித்தார்களா? என்பதுதான் திரைப்படத்தின் கதை. 

ரயில் டெல்லியிலிருந்து சென்னை வருவதற்குள் கதையும் முடிந்து விடும். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.தியாகராஜன் தயாரிக்கிறார், தனுஷ், கீர்த்தியுடன் பூஜா சவேரி, கணேஷ் வெங்கட்ராம், தம்பி ராமய்யா, ராதாரவி, ஆர்.வி.உதயகுமார், கருணாகரன், பிரேம், போஸ் வெங்கட், இமான் அண்ணாச்சி உட்பட பலர் நடிக்கிறார்கள். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார், டி.இமான் இசையமைக்கிறார். படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .