Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
2016ஆம் ஆண்டு ஆரம்பித்து 6 கிழமைகள் கடந்துவிட்ட நிலையில் தமிழ்த் திரைப்படங்களின் வெளியீடு இந்தவாரம் முதல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எதிர்வரும் 3 வராங்களில் அதாவது இந்த மாத இறுதிக்குள் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய திரைப்படங்கள் சில வெளிவரவுள்ளன.
இந்த வெள்ளிக்கிழமை 12ஆம் திகதி அஞ்சல, ஜில் ஜங் ஜக், வில் அம்பு ஆகியத் திரைப்படங்கள் வெளிவரவுள்ளன. இதில், விமல் நடித்துள்ள அஞ்சல திரைப்படம் படுத்துகிடக்கிற விமலின் மார்க்கெட்டை கொஞ்சமாவது தூக்கி நிறுத்தும் என்ற எதிர்பார்ப்பில் வெளியாகின்றது. சித்தார்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜில் ஜங் ஜக் வெளிவருகின்றது.
இதேவேளை, பெப்ரவரி 19ஆம் திகதி நான்கு திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. ஆறாது சினம், மிருதன், சேதுபதி, நவரச திலகம் ஆகியத் திரைப்படங்களே அன்றைய தினத்தில் வெளிவரவுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த வருடம், தனி ஒருவன் என்ற மாபெரும் ஹிட் கொடுத்த ஜெயம் ரவியின் நடிப்பில் தயாராகியுள்ள மிருதன் திரைப்படம் இரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். அதனைபோலவே நானும் ரௌடி தான் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி பொலிஸாக நடித்துள்ள சேதுபதி திரைப்படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
12ஆம் திகதி விஜய் சேதுபதியின் காதலும் கடந்து போகும் திரைப்படம் வெளியாகும் என்று முன்னதாக கூறப்பட்டாலும் சேதுபதி திரைப்படத்துக்கு வழிவிட்டு அடுத்த மாதத்துக்கு தள்ளி போய்விட்டது.
இம்மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையான பெப்ரவரி 26ஆம் திகதி கணிதன், போக்கிரி ராஜா, சௌகார் பேட்டை ஆகியத் திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன.
கடந்த வருடம் வெளியான ஈட்டி திரைப்படதின் வெற்றியையடுத்து பேசப்படும் ஹிரோக்களுள் ஒருவராக மாறியிருக்கும் அதர்வாவின் நடிப்பில் உருவாகியுள்ள கணிதன் திரைப்படத்தை அண்மையில் பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே பாராட்டியுள்ளார் என்பதால் இரசிகர்கள் மத்தியில் இந்தத் திரைப்படமும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது எனலாம்.
யான் திரைப்படத்துக்கு பிறகு நடிகர் ஜீவாவின் திரைப்படங்கள் எதுவும் கடந்த வருடமும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஒரு வருட இடைவெளிக்கு பிறகு போக்கிரிராஜா திரைப்படம் மூலம் இரசிகர்களை சந்திக்கின்றார் நடிகர் ஜீவா.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியான பேய்த் திரைப்படமான அரண்மனை இரண்டைத் தொடர்நது, இந்த மாதத்தில் வெளிவருகின்ற இரண்டாவது பேய்த் திரைப்படமான சௌகார் பேட்டை நடிகர் ஸ்ரீகாந், நடினை ராய் லக்ஷமி நடிப்பில் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படம் இரசிகர்களை மிரட்டுமா இல்லையா என்பiதை திரைப்படம் வெளியாகும் நாள்வரை காத்திருந்து பாரக்க வேண்டியதுதான்.
திரைப்படங்களின் வெளியீட்டு நிலைமை இதுதான் என்றாலும் எதிர்வரும் நாட்களில் அதில் மாற்றங்கள் ஏற்படலாம். இந்த வாரம் வெளிவரும் திரைப்படங்களின் வெற்றியைக் கொண்டுதான் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்பில் நம்மால் கணிக்க முடியும்.
13 minute ago
29 minute ago
42 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
29 minute ago
42 minute ago
53 minute ago