Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
George / 2016 ஜூன் 08 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்கா சென்ற நடிகர் ரஜினி, திட்டமிட்டபடி நாடு திரும்பாததால், கபாலி திரைப்பட விழாக்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ரஜினி எப்போது நாடு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
காபாலி இசை வெளியீட்டு விழாவை, ஜூன், 12ல் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தனர். இதுகுறித்து தயாரிப்பாளர் தாணு, டுவிட்டரில் விழா குறித்த திகதியை அறிவித்து இருந்தார்.
இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளில், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட திரைக்படக்குழுவினர் தீவிரமாக இருக்க, திடீரென இசை வெளியீட்டு விழாவை, தாணு நிறுத்தியுள்ளார்.
இது தவிர, ஜூலை, முதல் வாரம் திரைப்படத்தை வெளியிடுவதாக திட்டமிடப்பட்டிருந்து அதுவும் தள்ளி போயுள்ளது. திரைப்படத்தின் இசை, இணையம் வழியாக வெளியிடப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு, அமெரிக்காவுக்கு சென்ற ரஜினி, இன்னும் நாடு திரும்பவில்லை. அவர் இல்லாமல், இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடியாது என்பதால், டீசரை போலவே, இணையத்தில் இசையை வெளியிட்டு, சாதனை படைக்க, கபாலி குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
கபாலி, 2.0 திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு முன், உடல் நலக்கோளாறு காரணமாக சிகிச்சை பெற்ற ரஜினி, அதன்பின் ஓய்வில்லாமல் படப்பிடிப்பில் பங்கேற்றார்.
தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்ற போதும், தி.மு.க., தலைவர் கருணாநிதி பிறந்தநாளின் போதும், ரஜினி சம்பிரதாய வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், ஜூன், 12ல் நடப்பதாக இருந்த, கபாலி இசை வெளியீட்டு விழாவை இரத்து செய்தும், பட வெளியீட்டு திகதி தள்ளி போய் இருப்பதும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் உண்மையிலேயே அமெரிக்காவில் ஓய்வில் உள்ளாரா அல்லது சிகிச்சையில் உள்ளாரா? அமைதிக்காக, இமயமலை சென்றுள்ளாரா என்பதை அறிய அவரது இரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago