2025 மே 16, வெள்ளிக்கிழமை

இயக்குநருடன் தமன்னா காதல்?

George   / 2016 பெப்ரவரி 21 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதுவரை காதல் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளாத நடிகையான தமன்னா, இப்போது பொலிவூட் இயக்குநரை காதலிப்பதாக புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். 

நயன்தாரா, திரிஷா போன்ற சில முன்னணி நடிகைகள் காதலில் விழுந்து பின்னர் மீண்டு வந்தவர்கள். அதோடு தங்களது மார்க்கெட்டையும் சரியாமல் உறுதியாக்கிக் கொண்டார்கள்.

ஆனால், இதுவரை காதல் சர்சையில் சிக்காத தமன்னா, இந்த அதிர்ச்சி செய்தியை அப்படியே விட்டால் அதுவே தனது மார்க்கெட்டுக்கு வேட்டு வைப்பதாகி விடும் என்று அவசரகதியில் அதற்கு மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் விடுத்துள்ள செய்தியில், ஹிந்தியில் நான் நடித்த ஹிம்மத்வாலா, ஹம்சகல்ஸ் ஆகிய இரண்டு திரைப்படங்களையும் இயக்கியவர் சாஜித்கான். 

என்னை வைத்து இயக்கிய முதல் திரைப்படம் தோற்றபோதும், இரண்டாவது திரைப்படத்திலும் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அதற்கு காரணம் எங்களுக்கிடையே இருந்த நட்புதான். மற்றபடி காதல் எதுவும் இல்லை. 

மேலும், அந்தத் திரைப்படங்களின் படப்பிடிப்பு நடந்தபோது என்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார் சாஜித்கான். அதோடு, எனது நடிப்பு குறித்தும் ஊடகங்களில் உயர்வாக பேசினார்.

அவர் என்னை பெருமையாக பேசியதும், அவரது இரண்டு திரைப்படங்களிலும் நான் அடுத்தடுத்து நடித்ததினாலுமே இப்படியொரு காதல் செய்தி புகைந்திருப்பதாக கருதுகிறேன். 

மேலும், எனக்கு இயக்குநர்கள் யார் மீதும் காதல் வராது. காரணம், எனக்கு வாய்ப்பளிக்கும் அத்தனை இயக்குநர்களுமே என் மரியாதைக்குரியவர்கள். அதனால், அவர்களை நான் வணங்குவேனே தவிர காதலிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார் தமன்னா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .