2025 மே 15, வியாழக்கிழமை

இயக்குநரும் நடிகருமான பாலு ஆனந்த் காலமானார்.

George   / 2016 ஜூன் 03 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குநரும் நடிகருமான பாலு ஆனந்த், மாரடைப்பால் காலமானார்.

கோவை காளம்பாளையத்தில் வசித்து வந்த பாலு ஆனந்த்துக்கு இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் பாதி வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. பாலு ஆனந்த்தின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரிலேயே நடக்கும் என தெரிகிறது.

பாலு ஆனந்த்தின் மறைவு திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ‛நானே ராஜா நானே மந்திரி, சத்யராஜ் நடித்த அண்ணாநகர் முதல் தெரு, உனக்காக பிறந்தேன், ராஜாத்தி ராஜ ராஜமார்த்தாண்ட காத்தவராயன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் பாலு ஆனந்த்.

கடைசியாக, பவர் ஸ்டார் சீனிவாசனை வைத்து ஆனந்த தொல்லை என்ற திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அந்தத் திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை.

இயக்குநராக மட்டுமல்லாது நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். வானத்தை போல, உன்னை நினைத்து, அன்பே சிவம், உனக்காக எல்லாம் உனக்காக உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .