Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 04 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
போர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதால், குதிரை உள்ளிட்ட சில விலங்குகளை அதற்கு பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், 80க்கும் மேற்பட்ட குதிரைகள் படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தில் கடந்த மாதம் 11ஆம் திகதி ஒரு குதிரை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இயக்குனரும் தயாரிப்பாளருமான மணிரத்னம் மீதும், குதிரை உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக குதிரை பலியானது தொடர்பான புகைப்படம் அல்லது வீடியோ அனுப்புபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என Peta அமைப்பு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago