2025 மே 16, வெள்ளிக்கிழமை

இரு தசாப்தங்கள் தாண்டி பாட்ஷா

George   / 2016 ஜனவரி 12 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இது வரை இல்லை.. இனி வரப்போவதுமில்லை

சத்யா மூவீஸ் தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தேவா இசையமைப்பில் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி தமிழ்த் திரையுலகில் மாபெரும் சாதனை படைத்தத் திரைப்படமான பாட்ஷா வெளியாகி இன்றுடன் 21 வருடங்கள் ஆகிவிட்டன.

அந்தத் திரைப்படத்துக்கு முன்பும் சரி, பின்பும் சரி ரஜினிகாந்த் நடித்து எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்தாலும் இன்றைய இளம் இரசிகர்களும் இப்போதும் அரசிக்கக் கூடிய ஒரு திரைப்படமாக இருப்பது பாட்ஷா திரைப்படத்துக்குக் கிடைத்த பெருமை என்றே சொல்லலாம்.

சென்டிமென்ட், நகைச்சுவை, எக்ஷன், விறுவிறுப்பு, காதல் என அனைத்து அம்சங்களும் சரியான அளவில் கலந்து கொடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் போன்று இன்னுமொரு திரைப்படம் எந்தக் காலத்திலும் வரப் போவதில்லை என ரஜினி இரசிகர்கள் இன்று வரை கொண்டாடி வரும் ஒரு திரைப்படம். 

ரஜினிக்கு பாட்ஷா போன்று நமக்கு ஒரு திரைப்படம் அமையாதா என இன்றைய அஜீத், விஜய் உள்ளிட்டவர்கள் கூட அவர்கள் நாயகனாக அறிமுகமான காலத்திலிருந்தே போராடி வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கும் அப்படி ஒரு திரைப்படமும் அமையவில்லை, சுரேஷ் கிருஷ்ணா போன்ற ஒரு இயக்குனரும் கிடைக்கவில்லை.

இப்போதும் தொலைக்காட்சியில் இந்தத் திரைப்படம் ஒளிபரப்பானால் அன்றைய தினத்தில் சமூக வலைத்தளங்களில் டிரென்டிங்கில் பாட்ஷா கண்டிப்பாக இடம் பெற்று விடும். எத்தனை எந்திரன்கள் வந்தாலும் எத்தனை கபாலிகள் வந்தாலும் கூட இந்த ஒரு பாட்ஷாவுக்கு ஈடாகுமா என்பது சந்தேகமே?.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .