2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

இறுதிச்சுற்று மாதவனின் ஆரம்பம்

George   / 2016 ஜனவரி 29 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவன் நடித்துள்ள இறுதிச் சுற்று திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் ஒரு பிடிவாதக்கார குத்துச் சண்டை பயிற்றுவிப்பாளராக மாதவன் நடித்துள்ளார்.அதனால்தான் ஹிந்தியில் பிடிவாதக்காரன் என்ற அர்த்தத்தில் சாலா கதூஸ் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். 

இப்படத்தின் சிறப்புக் காட்சி நேற்று சென்னையில் திரையிடப்பட்டது. திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இந்த சிறப்புக் காட்சியில் கலந்து கொண்டார்கள். 

நடிகர்கள் ஆர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், சிவகார்த்திகேயன், பிரசாந்த், பிரேமம் புகழ் நிவின் பாலி, நடிகைகள் சுஹாசினி, ரோகிணி, லட்சுமி ராமகிருஷ்ணன், விஜயலட்சுமி, இயக்குநர்கள் சசி, கண்ணன், அகமது, ராதாமோகன், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும், இறுதிச் சுற்று குழுவினரும் கலந்து கொண்டனர்.

திரைப்படத்தைப் பார்த்த பலரும் நடிகர் மாதவனையும் நாயகி ரித்திகா சிங்கையும் வெகுவாகப் பாராட்டினார்கள். தமிழில் விளையாட்டை மையமாக வைத்து குறைவான திரைப்படங்களே வந்து கொண்டிருக்கின்றன. 

அதிலும் அண்மையில் குத்துச் சண்டையை மையமாக வைத்து சிலத் திரைப்படங்கள் வெளிவந்தன. ஆனால், அந்தத் திரைப்படங்களைக் காட்டிலும் இறுதிச் சுற்று மிகவும் யதார்த்தமாகவும், அருமையாகவும் இருந்ததாகப் பலரும் தெரிவித்துள்ளார்கள். மாதவன் தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்களிலும் நடிக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் முன்வைத்துள்ளனர்.

படத்திற்கு பத்திரிகையாளர்களிடமும், திரையுலகத்தினரிடமும் கிடைத்த வரவேற்பைப் போலவே ரசிகர்களிடமும் கிடைக்கம் என படக் குழுவினர் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X