2025 மே 15, வியாழக்கிழமை

இலக்கு தெரியாமல் சென்றேன்...

George   / 2016 ஜூன் 05 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது சூப்பர் ஸ்டாரின் மகளாக கபாலியில் நடிப்பதன் மூலம் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார் தன்ஷிகா. 

'சின்ன வயதிலேயே நடிப்பை நம்பி படிப்பை கைவிட்டேன். படிக்காத நான் நடிப்புதான் இனி எல்லாம் என்று இருந்தேன். ஆரம்ப காலத்தில் எத்தனையோ சிக்கல்கள், பிரச்சினைகள் அவற்றிலிருந்து என்னை காப்பாற்றி வழிநடத்தி வந்தது எனது அங்கிள் ஒருவரும், எனது தந்தையும்தான். 

நான் எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பவள். படப்பிடிப்பு இல்லாத காலங்களில் எதையாவது கற்றுக் கொண்டே இருப்பவள். பாண்டியன் மாஸ்டரிடம் சிலம்பம் கற்றேன். ஜிம்னாஸ்டிக் கற்றேன். இலக்கு இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தேன். 

அதன் பிறகு பெரிய திரைப்படங்கள், பெரிய இயக்குநர் என்று பயணித்து இன்று இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன்' என்றார் தன்ஷிகா.

வாய்ப்புகளுக்காக போராடிக்கொண்டிருக்கும்போது கைகொடுத்த 'காத்தாடி' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .