2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

இவ்வளவு திறமையா!

George   / 2016 ஜனவரி 18 , பி.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சரியான வாய்ப்பு கிடைக்காததால் திறமையை வெளிப்படுத்த முடியாமல் இருக்கும் நடிகர், நடிகைகளுக்கு தமிழத்; திரையுலகில் பஞ்சமேயில்லை அப்படி ஒருவராக இருந்த வரலட்சுமி, தாரை தப்பட்டை திரைப்படத்தில் சூறாவளி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தற்போது தன்னைப் பற்றி அதிகம் பேச வைத்திருக்கிறார்.

பொதுவாக பாலா திரைப்படங்களில் நடிக்கும் நாயகர்கள்தான் அதிகம் பேசப்படுவார்கள். நாயகிகள் சிறப்பாக நடித்திருந்தாலும் நாயகர்களின் நடிப்பு முன்னால் அவர்களின் நடிப்பு எடுபடாமல் போய் விடும். முதன் முறையாக, தாரை தப்பட்டை திரைப்படத்தின் நாயகனான சசிகுமாரின் நடிப்பை விட வரலட்சுமியின் நடிப்புப் பற்றி விமர்சகர்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

ஒரு கரகாட்டக்காரராக எந்த விதமான கூச்சமும் இல்லாமல் கவர்ச்சியான ஆடை அணிவதிலிருந்து, கொஞ்சம் ஆபாசமான நடனம் ஆடுவது வரை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார் வரலட்சமி.

நிஜ ஆட்டக்காரர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு வரலட்சுமியின் நடிப்பு அமைந்துள்ளதாக பொதுவான பாராட்டு வரலட்சுமிக்குக் கிடைத்து வருகிறது. திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் வரலட்சுமியைப் பாராட்டி வருகிறார்கள். இளையராஜாவின் இசையைத் தாண்டி வரலட்சுமியின் நடிப்பு மட்டுமே பலரையும் கவர்ந்த விடயமாக உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X