2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

எஸ்.பி.பி பாடிய பாடல்களை ஒலிக்கவிட்டு சிகிச்சை

Editorial   / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடகர் எஸ்.பி.பி.க்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையின் ஒரு பகுதியாக, அவர் பாடிய பாடல்கள் வைத்தியசாலை அறையில் ஒலிக்க விடப்பட்டு வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

அவருக்கு பிளாஸ்மா சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், 6 ஆவது மாடியில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டார். 

எஸ்.பி.பி.க்கு வழங்கப்பட்டு வந்த செயற்கை சுவாசத்தின் அளவும் குறைக்கப்பட்டது. எஸ்.பி.பி.க்கு அளிக்கப்படும் சிசிச்சைகள் நல்ல பலனைத் தருவதாக மருத்துவர்களும் கூறினர். 

சிகிச்சையின் ஒரு பகுதியாக, எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் ஒலிக்க விடப்படுகின்றன. எஸ்.பி.பி. இசைப்பிரியர் என்பதால் பாடல்களை ஒலிக்க செய்யும் முறை, நல்ல பலனைத் தரும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X