George / 2016 ஜனவரி 18 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபுசொலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ரயில் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், அத்திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக இரண்டு நாயகிகள் நடித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ரயிலில் நடக்கும் கதையில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் ரயில் பயணிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளும், தனுஷின் ஹீரோயிசத்தை வெளிப்படுத்தும் க்ளைமாக்ஷும் படமாக்கப்பட்டுள்ளன.
இதுவரை இந்தத் திரைப்படத்தில் நாயகியாக நடிப்பது கீர்த்தி சுரேஷ் என்ற செய்தி மட்டும்தான். வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஆனால்,இன்னொரு நாயகியும் இருக்கிறாராம். கதைப்படி சென்னையில் இருந்து புதுடெல்லிக்கு செல்லும் நடிகையாக தெலுங்கில் சிலத் திரைப்படங்களில் நடித்துள்ள பூஜா ஜவேரி நடித்துள்ளாராம்.
இந்த பூஜா ஜவேரிதான், வானவராயன் வல்லவராயன் திரைப்படத்தை இயக்கிய ராஜமோகன் இயக்கும் ருக்குமணி வண்டி வருது திரைப்படத்திலும் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025