2025 மே 15, வியாழக்கிழமை

ஒரு நாள் தோழி

George   / 2016 ஜூன் 09 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனுஷ் தயாரிக்கும் 'அம்மா கணக்கு' திரைப்படத்தில் அமலா பால், ரேவதி நடிக்கிறார்கள்.

24 வயது பெண் 18 வயது சிறுமிக்கு அம்மாவாக நடிக்கும் வித்தியாசமான கதை. ஹிந்தி, தமிழ் மொழிகளில் தயாராகி வருகிறது. இதில் அமலாபால் வானகரத்தில் உள்ள பிரமாண்ட மீன் சந்தையில் மீன் விற்கும் பெண்ணாக நடிக்கிறார்.

அவர் மீன் விற்கும் பெண்ணாக நடிக்கும் காட்சி, வானகரத்தில் உள்ள மீன் சந்தையில் ஒரு நாள் நடந்தது. 
அப்போது இயக்குநர், இந்த காட்சிகளில் அமலாபாலுக்கு ஒரு தோழி இருந்தால் நன்றாக இருக்குமே என்று கருதியிருக்கிறார். 

உடனே சுற்றும் முற்றும் பார்த்தவர் அங்கு எளிய அழகு, சாந்தமான முகத்துடன் மீனவ பெண்ணின் அச்ச அசல் சாயலில் நின்று கொண்டிருந்த மகேஸ்வரி என்ற பெண்ணை அழைத்து சில மணி நேரம் பயிற்சி கொடுத்து அமலாபாலின் தோழியாக நடிக்க வைத்து விட்டார்.

மகேஸ்வரி ஒரு சில காட்சியில் நடித்திருந்தாலும் அது படத்தில் பளிச்சென்று தெரியுமாம். இதனால் மகேஸ்வரிக்கு மேலும் வாய்ப்புகள் குவியலாம் என்று வானகர மீன் வியாபாரிகள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .