2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஒரு பஞ்ச் விட்டா தலை திரும்பிடும்: ஜெயம் ரவிக்கு எச்சரிக்கை

George   / 2015 டிசெம்பர் 29 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூலோகம் திரைப்படத்துக்காக பல மாதங்கள் பொக்சிங் பயிற்சி எடுத்து விட்டு நடித்திருக்கிறார் ஜெயம் ரவி.
வடசென்னை பொக்சர்கள் கதையில் உருவான இந்தத் திரைப்படத்தில் ஜெயம்ரவியுடன் அமெரிக்க நடிகர் நாதன் ஜோன்ஸ் நடிக்கிறார் என்றதும் அவரது தந்தையான எடிட்டர் மோகனுக்கு ரொம்ப பயமாகி விட்டதாம்.

இதுபற்றி அவர் கூறுகையில், பூலோகம் படப்பிடிப்பு நடந்தபோது ஒருநாள் படப்பிடிப்பு சென்றேன். அப்போது அமெரிக்க நடிகர் நாதன் ஜோன்ஸ் ஒரு சேரில் அமர்ந்திருந்தார். அவர் அருகே போய் நான் நின்றேன். அப்போதே அவர் என் உயரத்துக்கு இருந்தார். நான் அவர் நடித்துள்ள திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். 

நிஜத்திலும் பொக்சிங் தெரிந்தவரான அவர் சண்டை காட்சிகளில் பிரமாதமாக நடித்திருப்பார். அவர் நிஜத்திலும் பொக்சர் என்பதால் எனக்கு பயமாகி விட்டது. நடிக்கும்போது அவரது அடி தடுமாறி ஜெயம்ரவியின் மேல் பட்டு விட்டால் என்ன செய்வது என்று ரொம்ப பயந்தேன்.

அதனால், ஜெயம்ரவி நடிக்கப்போகிற ஒவ்வொரு நாளும், ரொம்ப ஜாக்கிரதைப்பா. உன்கூட நடிக்கிறவர் பெரிய பொக்சர். அவர் ஒரு பஞ்ச் விட்டா போதும் தலை திரும்பிடும். பாத்துக்கோடா பாத்துக்கோடா என்று தினமும் சொல்லி அனுப்பினேன். 

திரைப்படம் நல்லா வரனும். அதோடு என்புள்ளைக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது என்கிற பயம் இருந்து கொண்டேயிருந்தது என்கிறார் எடிட்டர் மோகன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .