2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஒரு வழியாக ஓகே சொன்ன ஜோதிகா

George   / 2016 மே 10 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் கேட்ட 2 கதைகள் பிடித்துவிட்டாதால் அதில் ஒரு திரைப்படத்தில் விரைவில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் ஜோதிகா. 

அப்படி அவர் நடிக்கும் திரைப்படத்தில் சூர்யாவே அவருக்கு ஜோடியாக நடிக்க, சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனமே தயாரிக்கிறது. விரைவில் அறிவிப்பு  வெளியாகவுள்ளது.

1999ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் சூர்யா - ஜோதிகா இணைந்து நடித்தனர். அதன்பிறகு உயிரிலே கலந்தது, பேரழகன், மாயாவி, ஜில்லுன்னு ஒரு காதல் போன்றத் திரைப்படங்களில் ஜோடி சேர்ந்து நடித்தனர். 

ஜில்லுன்னு ஒரு காதல் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே அவர்கள் திருமணம் செய்வது உறுதியாகியிருந்தது. 2006இல் அந்தத் திரைப்படத்தில் நடித்து முடித்தபோது ஏற்கெனவே ஒப்பந்தம் செய்திருந்த பச்சைக்கிளி முத்துச்சரம், மொழி ஆகிய திரைப்படங்களையும் முடித்துக்கொடுத்து விட்டு அதே ஆண்டில் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு நடிப்பில் இருந்து விலகியிருந்தார் ஜோதிகா. 

8 ஆண்டுகள் கழித்து மீண்டும் 36 வயதினிலே திரைப்படத்தின் ஊடாக மீண்டும் நடிக்க வந்த ஜோதிகா, அந்தத் திரைப்படம் வெற்றிபெற்றதை அடுத்து, தொடர்ந்து நடிக்க முடிவு செய்தார்.

அதனையடுத்து,  நிறைய கதைகள் கேட்டார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி திருப்திகரமான கதைகள் அமையவில்லை என்பதால் அந்த கதைகளை திருப்பி அனுப்பியிருந்தார்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .