Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2016 மார்ச் 01 , மு.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சினிமா உலகில் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படும் ஒஸ்கார் விருதின் 88ஆவது விருது வழங்கும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (இலங்கை நேரப்படி நேற்று திங்கட்கிழமை) இடம்பெற்றது.
இந்த விருது வழங்கும் நிகழ்வில் ஹொலிவூட் பிரபலங்கள் உட்பட உலகளாவிய சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.
இந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த திரைப்படமாக ஸ்பொட்லைட் தெரிவானது. சிறந்த நடிகராக தி ரெவனன்ட் திரைப்படத்தில் நடித்த லியானார்டோ டிகாப்ரியோ தெரிவானார். சிறந்த நடிகையாக பிறீ லார்சன் தெரிவானார். ரூம் என்றத் திரைப்படத்தில் நடித்தமைக்காக அவருக்கு இந்த விருது கிடைத்தது.
சிறந்த துணை நடிகராக பிரிட்ஜ் ஒப் ஸ்பைஸ்... திரைப்படத்தில் நடித்தமைக்காக மார்க் ரைலன்ஸ் தெரிவானார். அலிஷியா விகன்டர், சிறந்த துணை நடிகை விருதினை வெற்றிக்கொண்டார். தி டனிஷ் கேர்ள் என்றத் திரைப்படத்தில் நடித்தமைக்கான அவர் இந்த விருதினை பெற்றுக்கொண்டார்.
கடந்த ஆண்டின் மிகச் சிறந்த இயக்குநர் என்ற விருது, அலெக்ஸ்ஸான்டிரோ இனாரிட்டுக்கு வழங்கப்பட்டது. „தி ரெவனன்ட் என்றத் திரைப்படத்தை இயக்கியமைக்காக இவர் இந்த விருதுக்கு தெரிவானார்;. சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஒஸ்கார் விருதை த பிக் ஷோர்ட் திரைப்படம் தனதாக்கியது.
சிறந்த மூல திரைக்கதைக்கான விருது ஸ்பொட்லைட் திரைப்படத்துக்கு கிடைத்தது. சிறந்த பின்னணி இசைக்கான விருதை, „த ஹேட்புல் எயிட் திரைப்படத்துக்காக என்னியோ மொரிக்கோன் பெற்றுக்கொண்டார்.
சிறந்த பின்னணி பாடலாக ஸ்பெக்டர் திரைப்படத்தில் ஷாம் ஸ்மித் பாடிய ரைட்டிங் ஒன் த வோல் தெரிவானது.
விருதுகளின் முழுவிவரம்
1. சிறந்த திரைப்படம் - ஸ்பொட்லைட்
2. சிறந்த நடிகர் - லியானர்டோ டிகாப்ரியோ
3. சிறந்த நடிகை - பிறீ லார்சன்
4. சிறந்த துணை நடிகர் - மார்க் ரிலான்ஸ்
5. சிறந்த துணை நடிகை - அலிசியா விகன்டர்
6. சிறந்த இயக்குநர் - அலேக்ஸ்ஸான்ரோ இனாரிட்டு
7. சிறந்த தழுவல் திரைக் கதை - தி பிக் ஷொட்
8. சிறந்த திரைக்கதை - ஸ்பொட் லைட்
9. சிறந்த அனிமேஷன் திரைப்படம் - இன்சைட் அவுட்
10. சிறந்த வெளிநாட்டு திரைப்படம் - சன் ஒப் சவுல் - ஹங்கேரி
11. சிறந்த அனிமேஷன் குறுந்திரைப்படம் - பியர் ஸ்டோரி
12. சிறந்த ஒளிப்பதிவு - தி ரெவனனட்
13. சிறந்த ஆடை வடிவமைப்பு - மாட் மக்ஸ் - ப்யூரி ரோட்
14. சிறந்த ஆவணத் திரைப்படம் - ஆர்மி
15. சிறந்த ஆவண குறுந்திரைப்படம் - எ கேர்ள் இன் த ரிவர்: த் பிரஸ் ஒப் பொசிசினேவ்ஸ்
16. சிறந்த எடிட்டிங் - மேட் மெக்ஸ் - ப்யூரி ரோட்
17. சிறந்த நேரடி எக்ஷன் - ஸ்ட்டர்
18. சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் - மாட் மக்ஸ் - ப்யூரி ரோட்
19. சிறந்த பின்னணி இசை - த் ஹேட்புல் எயிட், என்னியோ மொரிக்கோன்
20. சிறந்த பின்னணி பாடல் - ரைட்டிங் ஒன் த வோல், ஷேம் ஸ்மீத் - ஸ்பெக்டர்
21. சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - மாட் மக்ஸ்- ப்யூரி ரோட்
22. சிறந்த ஒலியமைப்பு - மேட் மெக்ஸ் - பியூரி ரோட்
23. சிறந்த ஒலிக் கலவை - மேட் மெக்ஸ் - ப்யூரி ரோட்
24. சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் - இஎக்ஸ் மச்சினா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
15 May 2025