2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஓய்வெடுக்கும் த்ரிஷா

George   / 2016 ஜனவரி 05 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை த்ரிஷா தற்போது அமெரிக்காவில் ஓய்வெடுத்து வருகின்றார். விரைவில் தனுசுடன் கொடி திரைப்படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கும் திரிஷா, கடந்த வாரம் தனது தாயாருடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்குள்ள தனது உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்தபடி அமெரிக்க சாலையோரங்களில் எந்தவித இரசிகர் தொல்லையும் இல்லாமல் ஹாயாக நடந்து செல்லவே இந்த சுற்றுலாவாம்.

15 நாட்களுக்கு மேலாக அங்கு முகாமிட முடிவெடுத்துள்ள திரிஷா, மனதை ரிலாக்ஸ் செய்வதற்கே அங்கு சென்றிருப்பதால் சினிமா சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்பு கொள்ளும் தனது அலைபேசியை நிறுத்தி வைத்து விட்டாராம். 

அரண்மனை 2 திரைப்படத்தை அடுத்து, நாயகி எனும் பேய் திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் திரிஷா, நயன்தாரா நடித்த மாயா திரைப்படம் போன்று  தனக்கு வெற்றியாக அமைந்தால் தனது பெயரிலும் ஒரு கமர்சியல் வட்டம் உருவாகும் என்று எதிர்பார்க்கிறார். 

அதனால், இரண்டு வேடங்களுக்குமிடையே நிறைய வித்தியாசங்களை காண்பித்து நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் அதிகளவான படப்பிடிப்பு ஐதராபாத்தில்தான் நடந்து வருகிறது. 

போகி திரைப்படத்தைப்போலவே இதுவும்; தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் உருவாகி வருவதால், இந்தத் திரைப்படங்கள் வெற்றி பெறும்போது அடுத்தடுத்து தன்னை முன்னிறுத்தி மெகா திரைப்படங்கள் தேடி வரும் என்றும் எதிர்பார்க்கிறாராம் த்ரிஷா.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X