2025 மே 16, வெள்ளிக்கிழமை

கைகொடுக்குமா கதகளி?

George   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் இதுவரை தனக்கு ஒரு சரியாக இடம் கிடைக்கவில்லையே என்று நினைத்து வந்த நடிகை ரெஜினாவுக்கு கதகளி திரைப்படம் பெரிய ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நடிகர் விஷால், இயக்குநர் பாண்டிராஜ் முதன்முறையாக இணைந்துள்ள திரைப்படம் கதகளி. 
இந்தத் திரைப்படத்தை விஷால் பிலிம் பெக்டரி தயாரிக்க, பாண்டிராஜின் பசங்க புரொடக்சன்ஸ் திரைப்படத்தை வெளியிடுகிறது.

கிராமத்து பங்காளி கதையில் உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் மெட்ராஸ் கேத்ரின் தெரசா மற்றும் ரெஜினா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். 

இவர்களில் ரெஜினா ஏற்கெனவே பாண்டிராஜ் இயக்கிய கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர். அதன்பிறகு நிர்ணயம், ராஜதந்திரம் போன்றத் திரைப்படங்களில் நாயகியாக நடித்த ரெஜினா இந்தத் திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். 

கதகளி திரைப்படத்தில் செண்டிமென்ட் காட்சிகளில் நடித்துள்ள ரெஜினா, இதுவரை இல்லாத புதுமாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளாராம்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் எப்படி இறுதிக்காட்சியில் எல்லோரையும் கண் கலங்க வைத்தாரோ, அதைவிட இந்தத் திரைப்படத்தில் கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் பாச உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறாராம் பாண்டிராஜ். 

அப்படிப்பட்ட அந்த காட்சியில் ரெஜினாவுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதனால், அந்த காட்சியில் பாச உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தி பெரிய அளவில் பிரமிக்க வைத்துள்ளாராம் ரெஜினா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .