2025 மே 15, வியாழக்கிழமை

குத்து ரம்யாவின் அதிரடி ஆரம்பம்

George   / 2016 ஜூன் 14 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி என பல திரைப்படங்களில் நடித்தவர் குத்து ரம்யா. 

கன்னட சினிமாவில் முன்னணி நடிகையான இவர், 2011ஆம் ஆண்டு அரசியலில் குதித்தார்.

இருப்பினும் சினிமாவில் நடிப்பதை அவர் விடவில்லை. அவ்வப்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வந்த ரம்யா தற்போது சிவநாகம் என்றொரு திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். 

அண்மைகாலமாக கவர்ச்சி ஏரியாவில் களமிறங்காமல் நின்று கொண்டிருந்த ரம்யா, இந்த திரைப்படத்தில் சில பாடல் காட்சிகளில் பின்னி எடுத்துள்ளாராம்.

கன்னடத்தில் தயாரான இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கிலும் டப் செய்து வெளியிடுகிறார்கள். 

தெலுங்கில் உருவான அம்மன், அருந்ததி திரைப்படங்களுக்கு இணையாக இந்த திரைப்படத்தில் பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதால், 3 மொழிகளிலும் மெகா ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .