2025 மே 16, வெள்ளிக்கிழமை

காதல் என்றால் மாயை: அனுஷ்காவின் கருத்தால் சர்ச்சை

George   / 2016 ஜனவரி 20 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதல் என்பது வெறும் கவர்ச்சி. அது ஒரு மாயை. தெளிவில்லாத வயதில் ஏற்படுகிறது. இளம் வயதில் எல்லோரையும் அந்த மாயை பிடித்து ஆட்டுகிறது. வளர்ந்த பிறகு காதல் பெயரால் செய்த வேலைகளை நினைத்து பார்த்தால் சிரிப்புதான் வரும் என்கிறார் நடிகை அனுஷ்கா.

அத்துடன், எனக்கு காதல் அனுபவம் இல்லை. காதலிக்க நேரமும் இல்லை. சினிமாவில் ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறேன். சினிமாவை மட்டுமே இப்போது காதலிக்கிறேன் என்றும் சொல்லியுள்ளார்.

என்னுடைய திருமணம் நேரம் வரும்போது நடக்கும். எனக்கு கணவராக வருபவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அவரிடம் ஒளிவு மறைவுகள் இருக்க கூடாது. வெளிப்படையாக பழக வேண்டும். எனக்கு பிடித்தவை அவருக்கும் பிடிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆண் ஒருவரை சந்திக்கும் போது என் திருமணம் நடக்கும் என்று அனுஷ்கா மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .