2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

காதல் கிசுகிசு

George   / 2016 ஜனவரி 14 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை அஞ்சலியையும், சர்ச்சையையும் பிரிக்க முடியாது போலிருக்கிறது ஏனென்றால் அஞ்சலியின் புதுகாகதல் பற்றிய செய்தி திரையுலகில் தீயாக பரவி வருகின்றது. 

இரண்டு வருடங்களுக்கு முன் தமிழ்த் திரையுலகத்தில் அவருடைய சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தமிழ்நாட்டை விட்டுச் சென்று ஆந்திராவில் அடைக்கலமான அஞ்சலியைப் பற்றி அதன்பின் எந்த விதமான தகவல்களும் சில மாதங்களுக்கு வெளியாகவில்லை. 

எப்படியோ கடந்த ஆண்டு சகலகலா வல்லவன் திரைப்படத்தில் நடிக்க அவரை மீண்டும் அழைத்து வந்தார்கள். அஞ்சலி மீது வழக்குத் தொடுத்திருந்த இயக்குநர் களஞ்சியமும் அதன்பின் எந்த பிரச்சனைகளையும் செய்யாமல் ஒதுங்கிக் கொண்டார். 
தற்போது இறைவி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள அஞ்சலி, பேரன்பு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடித்துள்ள டிக்டேட்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதனிடையே, அஞ்சலியைப் பற்றிய வதந்தி மீண்டும் டோலிவுட் வட்டாரங்களில் செய்தியாக வர ஆரம்பித்தது. 
அவருக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளரான ஓம்கார் என்பவருக்கும் இடையே காதல் என்று அங்கு செய்திகள்

வெளியாகின. வழக்கம் போலவே அந்த வதந்தியை அஞ்சலி மறுத்துள்ளார். அவரை நான் இதுவரை சந்தித்தது கூட இல்லை, அப்புறம் எங்கிருந்துதான் இப்படியெல்லாம் வதந்திகள் கிளம்புகிறதோ என அவர் அண்மையில் பேட்டி ஒன்றில் அந்த வதந்திக்கு விளக்கம் கொடுத்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X