2025 மே 16, வெள்ளிக்கிழமை

குமரிமுத்துவின் உடல் நல்லடக்கம்

George   / 2016 மார்ச் 02 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவின் உடல், செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, திரையுலகினர் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். 

சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் குமரிமுத்து, முள்ளும் மலரும், இது நம்ம ஆளு உள்ளிட்ட, 900க்கும் மேற்பட்ட, தமிழ், தெலுங்கு திரைப்படங்களில், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 

தேர்தல் பிரசாரத்தில், தி.மு.க.,வின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த குமரிமுத்து, நடிகர் சங்க கட்டட விவகாரத்தில் பிரச்சினை எழுப்பி, அதனால், சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

அண்மையில், தெரிவுசெய்யப்பட்ட புதிய நிர்வாகிகள், குமரிமுத்துவை சங்கத்தில் மீண்டும் உறுப்பினராக சேர்த்தனர். சென்னை, நந்தனம், டர்ன்புள்ஸ் சாலையில் வசித்து வந்த அவர், கடந்த, மூன்று மாதங்களாக மூச்சுத் திணறல் பாதிப்பால், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (29) அதிகாலை மரணமடைந்தார். அவரது உடல் அஞ்சலிக்காக நந்தனத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

குமரிமுத்துவின் மறைவுக்கு, நடிகர் சங்க நிர்வாகிகள், தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். நடிகர்கள் கவுண்டமணி, செந்தில், நாசர், பொன்வண்ணன், விஷால், கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் சிலர் குமரிமுத்துவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், அவரது உடல் தேனாம்பேட்டையில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனைக்காக வைக்கப்பட்டது. பின்னர,  மந்தைவெளியில் உள்ள கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .