Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
'என்னது‚ கீர்த்தி காதலிக்கின்றாரா, அதுக்கு அவங்க வீட்டுல பச்சைக் கொடி காட்டிட்டாங்களா.... என்ன பாஸ் சொல்றீங்க?' என்று அதிர்ச்சியடையாதீங்க மக்களே
சினிமாவில் வளர்ந்து வரும்போது சில நடிகைகள் காதல் கிசுகிசுக்களில் சிக்கிக்கொள்வார்கள். ஆனால், கீர்த்தி சுரேஷ் இதுவரை எந்த கிசுகிசுக்களிலும் சிக்கவில்லை.
இதுபற்றி அவர் கூறுகையில், 'நான் அனைவரிடமும் நட்பாக பழகி வருகிறேன். ஆனால், அந்த நட்பு இதுவரை யாரிடமும் காதலாக மாறவில்லை. அதேசமயம், யார் மீதாவது காதல் வந்தால் கண்டிப்பாக காதலிப்பேன்.
எனது பெற்றோர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதால் காதலை மதிப்பவர்கள். அதனால், எனக்கு யாருடனாவது காதல் ஏற்பட்டு, அதை நான் என் பெற்றோரிடம் சொன்னால் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார்கள். எனது காதலுக்கு பச்சைக்கொடி காட்டி என்னை வரவேற்பார்கள்' என்கிறார் கீர்த்தி சுரேஷ்.
கீர்த்தி தொடரி, ரெமோ, விஜய் 60 ஆகிய திரைப்படங்களில் நடித்துவிட்டார். சூர்யா உள்ளிட்ட சில முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கும் பேசிக்கொண்டிருக்கிறார். தமிழ் திரைப்படங்களுக்கு போக எஞ்சிய நாட்களில் மட்டுமே தெலுங்கு திரைப்படங்களுக்கு கோல்சீட் கொடுக்கிறார். அந்தவகையில், தற்போதைக்கு தமிழுக்கே முதலிடம் கொடுக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago