George / 2016 ஜூலை 07 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஜினி முருகன் திரைப்படம் மூலம் புகழ் பெற்ற கீர்த்தி சுரேஷ், தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் பாம்பு சட்டை, தொடரி, ரெமோ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படங்கள் இறுதிக் கட்டத்தில் உள்ளதுடன் விரைவில் வெளியீட்டுக்கும் தயாராகியுள்ளன. அத்துடன், பரதன் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது ரோல்மொடல் நயன்தாரா என்று கூறியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது, 'எனது ரோல்மொடல் நயன்தாரா தான். ஹிந்தியில் எத்தனையோ வாய்ப்புகள் வந்தாலும் அந்த பக்கம் செல்லாமல் இங்கே இருக்கிறார்.
இருக்கிறதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது என்கிற அவருடைய பார்முலா வைத்தான் நான் பின்பற்றுகிறேன்' என்கிறார் கீர்த்தி சுரேஷ்.
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago