2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

குற்றப்பரம்பரைக்காக தொடரும் மோதல்

George   / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப் பரம்பரை திரைப்படத்துக்காக தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களான பாரதிராஜாவும், பாலாவும் மோதிக் கொண்டிருக்கும் விவகாரம்தான் தமிழ்த் திரையுலகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

'குற்றப் பரம்பரை என்பது ஒரு வரலாறு அதை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். அதை விட்டுவிட்டு, அந்தக் கதையை திரைப்படமாக எடுத்தால் வழக்கு தொடுப்பேன் என்று சொல்வது முட்டாள் தனம் என இயக்குநர் பாலா காட்டமாகவே தெரிவித்திருந்தார். அதோடு, தான் எடுக்க உள்ள திரைப்படம் குற்றப்பரம்பரை கதையே அல்ல, அந்தக் காலக் கட்டத்தில் நடந்த வேறு ஒரு கதையை கற்பனை கலந்து எடுக்கப் போகிறேன்' எனத் தெரிவித்தார்.

இதனிடையே பாலாவின் பேச்சை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், தான் குற்றப்பரம்பரை திரைப்படத்தை படமாக்குவதில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பதாகவும் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் திரையுலகத்தினரும், இரசிகர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கும் இரண்டு முக்கிய கலைஞர்கள் இப்படி மோதிக் கொள்வதை இயக்குநர்கள் சங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாகத் தலையிட்டு பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றே பல இயக்குநர்களும் விரும்புகிறார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X