2025 மே 15, வியாழக்கிழமை

குஷி 2வில் விஜய்க்கு பதிலாக எஸ்.ஜே.சூர்யா

George   / 2016 ஜூன் 04 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய்-ஜோதிகா நடிப்பில் 2000 ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் குஷி.

அதையடுத்து, தெலுங்கில் பவன் கல்யாண்-பூமிகா நடிப்பில் ரீமேக் செய்த எஸ்.ஜே.சூர்யா, பின்னர் ஹிந்தியில் பர்டீன்கான், கரீனா கபூரை வைத்தும் ரீமேக் செய்தார். 

இந்த நிலையில், குஷி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தமிழில் இயக்க விஜய் தரப்பில் முயற்சித்தார். ஆனால், அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. 

அதனால், இப்போது அந்தத் திரைப்படத்தை தெலுங்கில் மீண்டும் பவன்கல்யாணை வைத்து இயக்குபவர் ஸ்ருதிஹாசனை கதாநாயகியாக ஒப்பந்தம் பண்ணியுள்ளார். 

மேலும், இந்தத் திரைப்படத்தை மீண்டும் தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ள எஸ்.ஜே.சூர்யா, ஒருவேளை விஜய் அந்தத் திரைப்படத்தில் நடிக்க கோல்சீட் தராதபட்சத்தில் அவர் நடிக்க வேண்டிய ஹீரோ வேடத்தில் தான் நடித்து விடவும் முடிவு செய்திருக்கிறாராம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .